வெல்லம்பிட்டி கொட்டிகாவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்ற இ.போ.ச. பேருந்து விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சாரதி மற்றும் நடத்துனர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு-ஹட்டன் தடவழியில் பயணித்த இ.போ.ச. பேருந்து, மோட்டார் சைக்கிள் வீதியை கடக்கும் போது சறுக்கி விழுந்த பெண் மீது மோதி உயிரிழந்தார். இதனையடுத்து கோபமடைந்த பொதுமக்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கொடூரமாக தாக்கினர்.
இச்சம்பவம் தொடர்பாக, சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி டிப்போ கட்டுப்பாட்டு அதிகார சபை வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஹட்டன் இ.போ.ச. டிப்போ ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ காட்சிகள், சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கும் காட்சிகளை காட்டுகின்றன.
இச்சம்பவம் தொடர்பாக வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments