மட்டக்களப்பில் மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து!

மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் இன்று காலை (10-12-2024) மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

பெரியகல்லாறு பாலத்திற்கு அருகில் எதிர் எதிர் திசைகளில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று வாகனங்களே இவ்வாறு மோதிக்கொண்டுள்ளன. 

விபத்தில் வாகனங்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments