கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 17ஆம் திகதி முதல் இன்று வரை நடத்தப்பட்ட 342 சுற்றிவளைப்புகளில் 6 வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 7 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏனைய வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
#அதிகவிலை #அரிசி #சுற்றிவளைப்பு #நுகர்வோர்விவகாரஅதிகாரசபை
0 Comments