தம்புள்ளை - குருநாகல் வீதியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து



தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பிரதேசத்தில் இன்று காலை மூன்று தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முதல்கட்ட தகவல்களின்படி, ஒரு பேருந்தின் சாரதியின் கவனக்குறைவால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த பேருந்து மற்றொரு பேருந்தை பின் தொடர்ந்துள்ளது. அதே நேரம், மூன்றாவது பேருந்து வாகனத்தை கடக்க முயற்சித்த போது இந்த மூன்று பேருந்துகளும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக இந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தகவல்கள் வந்தவுடன் தெரிவிக்கப்படும்.

#தம்புள்ளை #குருநாகல் #விபத்து #பேருந்து

Post a Comment

0 Comments