கொழும்பு: இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான மின் கட்டணக் குறைப்பு தொடர்பில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மின்சார சபை, மின் கட்டணக் குறைப்பு தொடர்பான திருத்தப்பட்ட பிரேரணையை நாளை (06) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
இது குறித்து இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், மின்சார சபை தரவுகளை மீளாய்வு செய்து புதிய கணக்கீடுகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம், மின் கட்டணத்தை எவ்வளவு சதவீதம் குறைக்க இயலும் என்பது குறித்த இறுதி முடிவு இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மின்சார சபை மின் கட்டணக் குறைப்பு தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்திருந்தாலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, மின்சார சபை தற்போது புதிய பிரேரணையை தயார் செய்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு புதிய பிரேரணையை ஆய்வு செய்த பின்னர், மின் கட்டணக் குறைப்பு தொடர்பான இறுதி முடிவை வெளியிடும்.
இதனைத் தொடர்ந்து, மின் கட்டணக் குறைப்பு எப்போது அமுலுக்கு வரும் என்பது குறித்த தெளிவு கிடைக்கும்.
#மின்கட்டணம் #குறைப்பு #புதியபிரேரணை #மின்சாரசபை #பொதுபயன்பாடுகள்ஆணைக்குழு
0 Comments