ஏர் கனடா விமானமும் தீப்பிடிப்பு; தென் கொரியா விபத்தை தொடர்ந்து!


ஹாலிஃபாக், கனடா: தென் கொரியாவில் ஏற்பட்ட பயங்கர விமான விபத்துக்கு சில மணி நேரங்களுக்குப் பின், கனடாவின் ஹாலிஃபாக் விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் தீப்பிடித்துள்ளது. 

இதனால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நியூஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜான்ஸில் இருந்து வந்த ஏர் கனடா விமானம் 2259, தரையிறங்கும் போது தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறால் ஓடுபாதையில் சறுக்கி தீப்பிடித்தது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தில் இருந்த ஒரு பயணி கூறுகையில், விமானம் தரையிறங்கும் போது சத்தத்துடன் ஓடுபாதையில் சறுக்கியது. பின்னர் விமானத்தின் இறக்கை பகுதியில் தீப்பிடித்தது.

விமான நிலைய அதிகாரிகள் தீயை அணைத்துள்ளனர். தற்போது விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

#ஏர் கனடா #விமான விபத்து #ஹாலிஃபாக் #விமான நிலையம்

Post a Comment

0 Comments