தவறான செய்தி பரப்பும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்!

வடக்கில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அவர் கூறுகையில், "வடக்கில் 244 கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் பத்தில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக ஊடகங்களில் வடக்கில் நடந்த கொண்டாட்டங்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இது நாட்டில் இன, மத உணர்வுகளை கிளர்ந்துவிடும் வகையில் அமைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் அவர் குறிப்பிடுகையில் , சட்ட விரோத செயல்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

#வடக்கு #கொண்டாட்டங்கள் #பொதுபாதுகாப்புஅமைச்சர் #சமூகஊடகங்கள் #தவறானதகவல்கள்

Post a Comment

0 Comments