மனுஷ நாணயக்கார குடும்பத்துடன் நாட்டை விட்டும் வெளியேறினார்..



கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்கார நாட்டை விட்டு வெளியேறினார் என்கிற செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

சுவிட்சர்லாந்திற்கு சென்ற பின்னர் வேறொரு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. முதலில் தனியாக வெளியேறி, பின்னர் குடும்பத்தினரை அழைத்துச் சென்றதாகவும் செய்திகள் உலவுகின்றன.

இருப்பினும், அவரது நெருங்கிய உறவினர் ஒருவர், இது தனிப்பட்ட பயணம் என்றும் விரைவில் இலங்கை திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்திகள் வெளியாகும் நிலையில், மனுஷ நாணயக்காரின் சகோதரர் திசர நாணயக்கார, வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக மக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#மனுஷ_நாணயக்கார #வெளிநாடு #சமூக_வலைதளங்கள் #திசர_நாணயக்கார

Post a Comment

0 Comments