நீண்ட விடுமுறைக்கு சிறந்த இடமாக இலங்கை தெரிவு!

உலகளாவிய ஈ-காமர்ஸ் தளமான Ubuy India நடத்திய ஆய்வில், நீண்ட விடுமுறைக்கு உலகின் முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது. 

மலிவு, கலாச்சார செழுமை, பாதுகாப்பு மற்றும் பயண வசதி போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு 100 நாடுகளுக்கு மேல் ஆய்வு செய்த அறிக்கையில் இலங்கை 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கையின் குறைந்த குற்ற விகிதம், எட்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் மற்றும் மலிவு உணவு விலை போன்ற காரணிகள் இதற்கு முக்கிய காரணமாகும். 

மேலும், இலங்கையில் சுற்றுலாப் பருவம் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் நீடிப்பதால், நீண்ட காலம் தங்க விரும்பும் பயணிகளுக்கு இது சிறந்த இடமாக அமைகிறது.

இந்த ஆய்வில் வியட்நாம் முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும், ஜப்பான் 3வது பாதுகாப்பான இடமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#இலங்கை #சுற்றுலா #உலகஆய்வு

Post a Comment

0 Comments