நுவரெலியா, அம்பேவெல: நேற்று (14) பிற்பகல், அம்பேவெல கால்நடை பண்ணையில் நடந்த விபத்தில் 55 வயதான பண்ணை பரிசோதகர் உயிரிழந்தார்.
உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த உழவு இயந்திரம் அவரை மோதியது.
சிறிசமன்கம, அம்பேவெலத்தைச் சேர்ந்த இவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலம் நுவரெலியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக உழவு இயந்திர ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டிப்பொல பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
#உழவுஇயந்திரம் #விபத்து #பண்ணை #பரிசோதகர் #நுவரெலியா #பட்டிப்பொல
0 Comments