இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், மாகாண சபை முறையை இல்லாதொழிக்கும் முயற்சி குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜே.வி.பி பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபைகளை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டதை அடுத்து, சாணக்கியன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். அவர், இந்த விடயம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டு, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தக் கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க, இராசமாணிக்கம் சாணக்கியன் மீது மரியாதை கொண்டிருப்பதாகக் கூறி, அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன், ஜனாதிபதியுடன் இது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல் நடத்தக் கோரியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#மாகாணசபை #ஜேவிபி #இலங்கைதமிழரசுக்கட்சி #அரசியல்
0 Comments