பல கோடி ரூபா மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டோடிய தம்பதி கைது!

கொழும்பு: 1.6 பில்லியன் ரூபா நிதி மோசடி வழக்கில் குற்றவாளியாகச் சாட்டப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியினர், நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்களது வருகைக்கு முன்பாகவே குற்றப்புலனாய்வுத் துறையினர் இவர்களை கண்காணித்து வந்தனர். நேற்று (26) அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் இந்த தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#நிதிமோசடி #கைது #கட்டுநாயக்க #குற்றப்புலனாய்வு

Post a Comment

0 Comments