ரியாத்: சவூதி அரேபியாவில் நடைபெற்ற பேரீச்சம்பழ கண்காட்சியில், உலகின் முதல் பேரிச்சம்பழ குளிர்பானமான 'Milaf Cola' அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய குளிர்பானம், சர்வதேச உணவுப் பாதுகாப்புத் தரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் கிடைக்கும் பேரீச்சம்பழங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
சவூதி அரேபியாவின் பாரம்பரிய உணவுப் பொருளான பேரிச்சம்பழத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த குளிர்பானம், உலகளவில் பேரீச்சம்பழத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும், சவூதி அரேபியாவின் விவசாயத் துறையை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய குளிர்பானத்தின் அறிமுகம், பேரீச்சம்பழத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பல்வேறு வகையான உணவுப் பொருட்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளது.
#பேரீச்சம்பழம் #குளிர்பானம் #சவூதிஅரேபியா #MilafCola
0 Comments