வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு !

இலங்கையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வாகன இறக்குமதிக்கு விரைவில் வழி பிறக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பமாகும் என அறிவித்துள்ளார்.

அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இறக்குமதியாளர்கள் இதற்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், நிதியமைச்சகம் வாகன இறக்குமதியை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், சர்வதேச நாணய நிதியமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் சுமார் 600 வாகன இறக்குமதியாளர்கள் கடந்த 4 ஆண்டுகளாக இறக்குமதி தடை காரணமாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. 

விரைவில் நியாயமான விலையில் வாகனங்களை வாங்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்களும் உள்ளனர்.

Post a Comment

0 Comments