மோட்டார் சைக்கிள் விபத்து: சில்லு தலையில் ஏறி யுவதி பலி!




கண்டி வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் தனியார் பஸ்சுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை மற்றும் மகள் என இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் தனியார் பஸ்சுடன் மோதியதில், பின் இருக்கையில் பயணித்த மகள் கீழே விழுந்து அருகில் சென்ற வாகனத்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

மேலும் விபத்தில் தந்தைக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கண்டி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




#கண்டி #விபத்து #மோட்டார்சைக்கிள் #பலி

Post a Comment

0 Comments