சுதந்திர மக்கள் பேரவை, முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித நியாயமான காரணமும் இன்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது.
பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும, இது ஒரு கூட்டு ஊழலுக்குப் பிறகு செய்யப்பட்ட அரசியல் கருக்கலைப்பு மற்றும் பொருளாதாரக் கொலை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கடிதம், ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக செலவிடப்பட்ட 72 கோடி ரூபாவை விரயமாக்கியமை குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
#ரணில் #ஊழல் #தேர்தல் #சுதந்திரமக்கள்பேரவை
0 Comments