எத்தியோப்பியாவின் போனா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பயங்கரமான ட்ரக் விபத்தில் குறைந்தது 71 பேர் பலியாகியுள்ளனர்.
பயணிகளை ஏற்றிச் சென்ற ட்ரக் வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் இந்த மிகப்பெரிய துயரம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள். 68 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
#எத்தியோப்பியா #ட்ரக்விபத்து #பலி
0 Comments