வடக்கில் மர்மக் காய்ச்சல்: இதுவரை 7பேர் உயிரிழப்பு!




வடக்கு மாகாணத்தில் பரவியுள்ள அடையாளம் தெரியாத காய்ச்சல் காரணமாக ஏற்கனவே 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இந்த காய்ச்சல் அதிகமாக பரவியுள்ளதாகவும், இதற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து மருத்துவ குழுக்கள்:

இந்த மர்மக் காய்ச்சலின் தன்மையை அறிந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து இரண்டு மருத்துவ குழுக்கள் இன்று மற்றும் நாளை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளன. 

மேலும், இந்த காய்ச்சலுக்குரிய தடுப்பு மருந்துகள் வேறு மாவட்டங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை:

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுக்கு, மாவட்டத்தின் ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலிருந்து ஆளணியினரைப் பெற்றுப் பயன்படுத்துமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

#வடக்கு #மர்மக்காய்ச்சல் #உயிரிழப்பு #சுகாதாரம் #கொழும்பு

Post a Comment

0 Comments