தெல்தெனிய, திகன பிரதேசத்தில் வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை வாங்க 5000 ரூபாய் போலி நோட்டை வழங்கியதாக கூறி நான்கு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெல்தெனிய பொலிஸாரின் விசாரணையின்படி, இந்த மாணவர்கள் 15-16 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து மொத்தம் 57 போலி 5000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மாணவர்கள், தங்களுக்கு தெரிந்த மாமா ஒருவரிடம் இந்த போலி நோட்டுகளை பெற்றதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#போலினோட்டுகள் #கைது #மாணவர்கள் #தெல்தெனிய
0 Comments