440 மெட்ரிக் டன் அரிசி நாட்டை வந்தடைந்தது!

இலங்கையின் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முயற்சியில், இந்தியாவிலிருந்து 440 மெட்ரிக் டன் அரிசி ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அரிசி விலை உயர்ந்து பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், அரசாங்கம் தனியார் துறையினருக்கு அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அரிசி இறக்குமதி செய்யலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், அரிசியின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. 

இதன் மூலம் நுகர்வோர் அதிக விலை கொடுத்து அரிசி வாங்கும் நிலை தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#இலங்கை #அரிசி #இறக்குமதி #தட்டுப்பாடு #விலை

Post a Comment

0 Comments