கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற விசேட போக்குவரத்து சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 383 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 8,392 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுக்கும் நோக்கில், கடந்த 23ஆம் தேதி முதல் நாடு முழுவதும் விசேட போக்குவரத்து சோதனை நடைபெற்று வருகிறது.
#போக்குவரத்துவிதிமீறல் #மதுபோதை #வாகனவிபத்து
0 Comments