கொழும்பு: அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று காலை வட தமிழகம்-புதுச்சேரி கரையைக் கடந்த ஃபெங்கல் புயலின் தாக்கம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்திய இராணுவம் மற்றும் மீட்புக்குழுவினர் வெள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதாகவும், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#வானிலை #ஃபெங்கல்புயல் #வெள்ளம் #மீட்புப்பணிகள்
இச்செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
NEWSPRO.LK TAMIL
0 Comments