திருகோணமலையில் 30 ஆண்டுகளின் பின் திறக்கப்பட்ட வீதி!



திருகோணமலையில் மூன்று தசாப்த காலமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டிருந்த உவர்மலை 22ஆம் படைப்பிரிவின் இராணுவ படைத்தளத்திற்கு செல்லும் வழி இன்று திறக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் அலுவலக வீதி வழியாக 22ஆம் படைப்பிரிவின் ராணுவ நூதனசாலையை அடையக் கூடிய இந்த உவர்மலை மத்திய வீதி, கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டு இருந்தது. 

இதனால், உவர்மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் அப்பகுதிக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இவ்வீதி இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இதனால், உவர்மலை பகுதியின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு ஆகியவற்றிற்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#திருகோணமலை #உவர்மலை #ராணுவம் #வீதிதிறப்பு #பொதுமக்கள்

Post a Comment

0 Comments