காங்கோவின் இனோங்கோ நகரில் நேற்று நடைபெற்ற படகு விபத்தில் குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஃபிமி ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்த படகு அதிக சுமையால் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
100க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கின்ஷாசாவிலிருந்து புறப்பட்ட படகு, ஆற்றின் நடுவில் கவிழ்ந்துள்ளது. இதில் 12க்கும் மேற்பட்டவர்கள் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மட்டும் காங்கோவில் நடைபெற்ற நான்காவது படகு விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
#காங்கோ #படகுவிபத்து #உயிரிழப்பு #பாதுகாப்பு
0 Comments