கொழும்பு: தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அழுத்தப் பிரதேசம் டிசம்பர் 11ஆம் தேதி இலங்கை-தமிழ்நாடு கரைகளுக்கு அப்பாற்பட்ட தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டிசம்பர் 10ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நிலைமைகளுடன் இணைந்து, நாட்டில் வடகிழக்கு பருவக்காற்று நிலைமையும் படிப்படியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீ அளவான கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் எச்சரிக்கை:
கனமழை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments