கிளிநொச்சி, டிசம்பர் 25: இன்று மாலை கிளிநொச்சி வலயக்கல்விப்பணிமனை முன்பாக நிகழ்ந்த டிப்பர் விபத்தில் 2 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
நிறை போதையில் இருந்த டிப்பர் சாரதி மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பத்தின் மீது மோதியுள்ளார்.
விபத்தில் சிக்கிய தாய் ஆபத்தான நிலையிலும், தந்தை மற்றும் 7 வயது மகன் படுகாயம் அடைந்த நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய டிப்பர் சாரதியை பொதுமக்கள் சுமார் 300 மீட்டர் தொலைவில் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments