அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சோமாலியாவிலிருந்து பிரிந்து இதுவரை அங்கீகரிக்கப்படாத நாடாக இருந்து வரும் சோமாலிலாந்தை உலகின் 194 வது (முஸ்லிம்) குடியரசாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதன்மூலம் சோமாலிலாந்து உலகின் மிகப்பெரிய முஸ்லிம் குடியரசாக மாறும். சுமார் 62 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் இந்த நாடு, 1991 உள்நாட்டுப் போருக்குப் பிறகு சோமாலியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக செயல்பட்டு வந்தாலும், சர்வதேச அங்கீகாரம் இல்லாமல் இருந்து வந்தது.
இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கா சோமாலிலாந்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது, ஹூதிஸ்ட் மற்றும் யெமன் ராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப்பின் இந்த தீர்மானம் உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும், இதன் மூலம் சோமாலிலாந்து மக்கள் பொருளாதார வளர்ச்சியை அடையவும், சர்வதேச அங்கீகாரத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது.
#சோமாலிலாந்து #டொனால்ட்_ட்ரம்ப் #அமெரிக்கா #முஸ்லிம்_குடியரசு
0 Comments