இலங்கை கடற் பரப்பிற்குள் அத்துமீறிய 17 இந்திய மீனவர்கள் கைது!




மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறி 17 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையின் தகவலின்படி, இந்த ஆண்டு மட்டும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி 546 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 72 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் எல்லை பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதனால் இரு நாட்டு மீனவர்களும் அவ்வப்போது கைது செய்யப்படுவது வழக்கமாகிவிட்டது.

#இலங்கை #இந்தியா #மீனவர்கள் #கைது #கடற்படை



Post a Comment

0 Comments