றிஸ்வி சாலி தலைமையில் 17ஆம் திகதி பாராளுமன்றம்!

கொழும்பு: சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சையை அடுத்து, தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து, புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அரசியல் வட்டாரங்களின் தகவலின்படி, பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர்கள் லக்ஷ்மன் நிபுணஆராச்சி மற்றும் நிஹால் கலப்பத்தி ஆகியோரின் பெயர்கள் புதிய சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

பாராளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி தலைமையில் கூடி, அரசியலமைப்பின்படி புதிய சபாநாயகரை நியமிக்கும்.

#சபாநாயகர் #இராஜினாமா #அரசியல் #நாடு

Post a Comment

0 Comments