வாகன விபத்தில் 13 பேர் பலி!



நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடைபெற்ற 10 வாகன விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஹட்டன், பின்னதுவ, மாரவில உள்ளிட்ட பகுதிகளில் இந்த விபத்துகள் பதிவாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் நான்கு பேர் பாதசாரிகள் என பொலிஸ் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலம் என்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வருடம் மட்டும் 22,967 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 2,243 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4,552 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments