கடந்த புதன்கிழமை, இலங்கைக்கு ஒரே நாளில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவலின்படி, அன்று மட்டும் 9,847 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதற்கு முன்னர், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி 8,696 சுற்றுலாப் பயணிகள் வருகையுடன் ஒரே நாளில் அதிகபட்ச வருகை பதிவாகியிருந்தது.
இந்த புதிய சாதனை, இலங்கையின் சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள மீட்சியை எடுத்துக்காட்டுகிறது.
இந்த மாதம் 11 ஆம் திகதி வரை, மொத்தம் 68,648 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது, இலங்கையின் சுற்றுலாத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது என்பதை நிரூபிக்கிறது.
#சுற்றுலா #இலங்கை #சாதனை #பயணிகள்
0 Comments