தமிழகத்தை நோக்கி நகரும் புயல்; மீண்டும் இலங்கைக்கு வரலாம்!

தமிழகத்தை நோக்கி வரும், புயலை எதிர்கொள்ள முழு ஆயத்தத்தோடு  தயாராக இருப்பதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

18,000-க்கும் மேற்பட்ட பொலிசார் மற்றும் 800 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளுக்கு தயாராக உள்ளனர். 

24 மணி நேரமும் செயல்படக்கூடிய 35 கட்டுப்பாட்டு மையங்கள் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த புயல் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து, 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை நோக்கி திரும்பலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முக்கிய குறிப்பு: கடலோரப் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

#சென்னைபுயல் #இலங்கை #வானிலை

NEWSPRO.LK

Post a Comment

0 Comments