எச்சரிக்கை : புயலாக வலுவடைந்துள்ள ஆழ்ந்த தாழமுக்கம்!



தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் துறை தெரிவித்துள்ளது. 

இந்த புயல் நாளை, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளை கடக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை நிலவரப்படி, இந்த புயல் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கி.மீ. தொலைவிலும், திருகோணமலைக்கு வடகிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. 

புயல் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை சூறாவளியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#புயல் #எச்சரிக்கை #தமிழகம் #புதுச்சேரி #வளிமண்டலவியல்

NEWSPRO.LK TAMIL 

Post a Comment

0 Comments