அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற திடீர் முதலை தாக்குதலில் ஒருவர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசரச்சேனை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய இந்த நபர், தூவ ஆற்றில் இருந்து எருமை மாடுகளை கரைக்கு கொண்டுவரும் போது முதலையால் திடீரென தாக்கப்பட்டு ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டதாக பொத்துவில் பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
NEWSPRO.LK TAMIL
0 Comments