வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களின் உடல்கள் மீட்பு !

Update : 4ஆவது உடல் மீட்பு: உழவு இயந்திர விபத்தில் சிக்கி வெள்ளத்தில் காணாமல் போயிருந்த 4ஆவது சிறுவனின் உடல் மீட்பு!

Update : காணாமல் போயிருந்தவர்களில் மூன்றாவது உடல் மீட்காப்பட்டது.

அம்பாறை மாவட்டம், காரைதீவு - மாவடிபள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உழவு வண்டி ஒன்று அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கிய 14 பேரில், இரண்டு மதரசா மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட உழவு வண்டியில் இருந்து 5 பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், வண்டியின் சாரதி, அவரது இரு நண்பர்கள் மற்றும் மேலும் 3 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். 

இந்த காணாமல் போனவர்களை மீட்க கடற்படை, காவல்துறை மற்றும் இராணுவம் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மீட்கப்பட்ட மாணவர்களின் உடல்கள் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.













#காரைதீவு #வெள்ளம் #மீட்புப்பணி #துயரம்

NEWSPRO.LK

Post a Comment

0 Comments