தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உறுதியளித்துள்ளார். அத்துடன் நாட்டில் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
” நாட்டில் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமாக இருக்கின்றது.
எனவே, இப்போதைக்கு அந்த முறைமை நீக்கப்படமாட்டாது. ஆனால் எதிர் காலத்தில் நிச்சயம் மாற்றப்படும். அத்தோடு புதிய அரசமைப்பும் கொண்டுவரப்படும்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்.” – என JVPயின் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
0 Comments