சீரற்ற வானிலை காரணமாக ஆறு விமானங்கள் திருப்பி விடப்பட்டன (BIA)

 மோசமான காலநிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கவிருந்த ஆறு விமானங்கள் ஹம்பாந்தோட்ட மத்தள விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

 அதன்படி, நரிடா, துபாய் மற்றும் சென்னையில் இருந்து வந்த மூன்று விமானங்கள் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கும், சென்னை, மாலே மற்றும் அபுதாபியிலிருந்து வந்த மூன்று விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளதாக BIA இன் கடமை மேலாளர் உறுதிப்படுத்தினார். 

Post a Comment

0 Comments