காரைத்தீவு உழவு இயந்திர விபத்து: 8ஆவது உடலும் மீட்பு!

காரைத்தீவு : கடந்த 26ஆம் தேதி நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளான சோக சம்பவத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 11 மாணவர்கள், சாரதி மற்றும் உதவியாளர் என மொத்தம் 13 பேர் பயணித்தனர். வெள்ளத்தில் சிக்கிய 5 மாணவர்கள் சில மணி நேரங்களிலேயே மீட்கப்பட்டனர். 

மீதமுள்ள 8 பேரில் உழவு இயந்திர சாரதி மற்றும் கூட சென்ற நபர் உள்ளடங்களாக  7 பேரின் உடல்கள் ஏற்கனவே மீட்கப்பட்திருந்தன.

கடைசியாக இன்று காலை தஷ்ரிப் என்ற மாணவரின் உடல் 4 நாட்களுக்குப் பிறகு EHED("எகெட்") வீட்டுத்திட்டத்தின் பின்னால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 08 பேரின் உடல்களும் இன்றோடு கிடைக்கப்பெற்றுள்ளது.



#காரைத்தீவு #உழவுஇயந்திரம் #விபத்து #மாணவர்கள் #உயிரிழப்பு

Post a Comment

0 Comments