அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே நேற்று முன்தினம் 26.11.2024 நடைபெற்ற சோக நிகழ்வில், உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் காணாமல் போன சம்பவத்தில் இன்று காலை வரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டவர்களில் ஒரு மாணவரன், உழவு இயந்திர சாரதி மற்றும் அஜ்மீர் (புகைப்பறிசோதகர் ) உள்ளிட்டோர் அடங்குவர்.
நேற்று இடைநிறுத்தப்பட்ட மீட்புப் பணிகள் இன்று அதிகாலை மீண்டும் தொடங்கப்பட்டு, காணாமல் போனவர்களின் உடல்கள் ஆங்காங்கே கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இன்னும் ஒரு மாணவரின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சோக நிகழ்வு குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பு : எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படலாம்.
#அம்பாறை #மாவடிப்பள்ளி #வெள்ளம் #மீட்புப்பணி #சோகநிகழ்வு
0 Comments