காரைத்தீவு விபத்து: மத்ரஸா அதிபர் உட்பட 4 பேர் கைது!


அம்பாறை மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மதரஸா அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திர உதவியாளர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக பஸ் இயக்கம் இல்லாததால், மாணவர்களை உழவு இயந்திரத்தில் அனுப்ப உத்தரவிட்டதாகவும், இராணுவத்தின் எச்சரிக்கையை மீறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 5 மாணவர்கள், சாரதி, புகை பரிசோதனை அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 மாணவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்க படுவதாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பு : எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம்.

NEWSPRO.LK TAMIL

Post a Comment

0 Comments