எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து இலங்கை தம்பதியினருக்கும் அரசாங்கம் வீடு வழங்கும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர், வீடு இல்லாததால் திருமணங்கள் தாமதமாகும் நிலை இனி இருக்காது என்றும் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், 24 முதல் 30 வயதுக்குள் திருமணம் செய்துகொள்வது சிறந்தது என்றும், இந்த வயதில் திருமணம் செய்யும் தம்பதியினருக்கு வீடு வழங்குவது அரசின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த இலக்கை அடைய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#வீடு #திருமணம் #அரசுத்திட்டம் #வீடமைப்பு
NEWSPRO.LK TAMIL
0 Comments