"இலங்கையின் மெகா சூரியாரச்சி, வியட்நாமில் நடைபெற்ற மிஸ்டர் வேர்ல்ட் 2024 போட்டியில் வரலாறு படைத்துள்ளார்.
உலக மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 'மக்கள் தேர்வு' விருதை வென்றதோடு, தனது அழகிய தேசிய உடையுடன் இலங்கையின் கலாச்சாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியமைக்காக 'தேசிய உடை மக்கள் தேர்வு' விருதையும் பெற்றுள்ளார்.
இவர், மிஸ்டர் வேர்ல்ட் போட்டியின் முதல் பத்து இடங்களில் இடம்பெற்ற இலங்கைக்கே முதல் நபர் என்ற பெருமையை தேடித் தந்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், இலங்கை உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது."
Megha Sooriyaarachchi wins big at Mr. World 2024🇱🇰#mrworld #srilanka #newsfirst pic.twitter.com/HgOgLbULsQ
— Newsfirst.lk Sri Lanka (@NewsfirstSL) November 24, 2024
0 Comments