மின்சார வேலி தாக்கி அரிய வகை யானை ‘தீகதந்து-1 பலி!

அனுராதபுரம்: கலா வேவா சரணாலயத்தில் வாழ்ந்த மிகப்பெரிய தந்தங்களைக் கொண்ட அரிய வகை காட்டு யானை ‘தீகதந்து-1’ மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரம், அடியாகல கிகுருவெவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சார வேலியில் சிக்கி இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த யானை, தனது பெரிய தந்தங்களால் பலருக்கும் அறியப்பட்டிருந்தது. அதன் மரணம் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வனத்துறையினர் மற்றும் பொலிசார் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#வனஉயிரினம் #மின்சாரவேலி #தீகதந்து

இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் ஷேர் செய்யுங்கள்.

NEWSPRO.LK

Post a Comment

0 Comments