20 ஆவது சீர்திருத்தத்திற்கு ஆதரவாக கை உயர்த்தியது குற்றமா?

 

20 வது சீர்திருத்தம் உண்மையில் அரசியல் சீர்திருத்தங்களில் மிகவும் மோசமான சீர்திருத்தம் என்பதில் மாற்றுக்கருத்து யாரிடமும் இல்லை.

ஜனாஸாவை எரிப்பதற்கு அனுமதி கொடுத்த ஆதரவு அல்ல.

அது உயிரோடு வாழ்கின்ற எல்லா சிறுபான்மை இனத்தையும் ஒவ்வொரு செக்கனும் நிமிடமும் மானசீகமாக கொலை செய்கின்ற சீர்திருத்தம் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

இது முற்றிலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது குடும்பத்தை 500 வருடங்கள் ஆட்சி செய்ய என்ற ஏக நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட சீர்திருத்தம்.

இதில் மிக முக்கியமான ஒன்றுதான் இரட்டைப் பிரஜா உரிமைக்கு அனுமதி கொடுத்தல். 

*ஜனாதிபதியின் அதிகாரத்தை கூட்டுதல் 

*பிரதமரின் அதிகாரத்தை குறைத்தல் 

*பாராளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்தல் 

*சுயாதீன ஆணைக் குழுக்களை இல்லாமல் செய்தல் ( நினைத்ததை செய்ய)

*கணக்கு வழக்கு கேட்கக் கூடாது ( ஊழல் செய்ய) என்பதாகும். இது ஒரு முக்கியமான விடயம். 

*நினைத்த மாத்திரத்தில் அவசரச்காலச் சட்டத்தை கொண்டு வரல் ( மக்களுக்கு அநியாயம் செய்ய)

*ஜனாதிபதியாக வர குறைந்தது முப்பது வயது ( நாமலை ஜனாதிபதியாகக் கொண்டு வர) 

# (இரட்டைப் பிரஜா உரிமை ( பசில் ஜனாதிபதியாக வர) இதனை அதிகம் விரும்பியவர் யார்?)#

இப்படி முக்கியமான சீர்திருத்தங்கள் அதில் இடம்பெறுகின்றன. 

இவை முழுக்க முழுக்க மஹிந்த குடும்பத்தை தொடர்ந்தும் ஆட்சியில் அமர்த்த. 

இந்த சீர்திருத்தத்தில் ஜனாஸாவை எரிக்க என்ற ஒன்று இல்லை. 

இதற்கு மிக முக்கியமாக, மறைமுகமாக உதவி செய்த தலைவர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு தலைவர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். 

பஸில் ராஜபக்ச அவர்கள் ஒரு உத்தமர் என்று சொன்னார்கள் இப்பொழுதும் சொல்கிறார்கள்.

நல்ல காலம் கபுடா என்ற பேட்டி வராவிட்டால் இன்று அவர்தான் ஜனாதிபதி.

ஏனெனில் பசில் ராஜபக்ஷ அவர்களுக்கும் இவருக்கும் இடையில் நிறைய வியாபாரங்கள் இருந்தன என்பது உண்மை. 

இந்த உண்மையை கண்டு கொள்ள மாட்டார்கள்.

இப்போது சிறைவாசம் அனுபவித்தார் சமூகத்துக்காக என்ற கோஷம் ஓங்கி ஒலிக்கிறது. 

சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இரண்டு தலைவர்கள் பூரண ஆதரவு வழங்கிவிட்டு பின்னர் மறுத்தார்கள் என்பதெல்லாம் உண்மை. 

கையை உயர்த்தியவர்கள் வசமாக மாட்டிக் கொண்டார்கள்.

கையை உயர்த்துச் சொன்னவர்கள் லாவகமாகத் தப்பிக்கொண்டார்கள்.

ஜனாஸாவை எரிக்க யாரும் கை உயர்த்தவில்லை என்பதுதான் உண்மை. 

அப்போது எந்த ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாஸாவை எரிப்பதை விரும்பவில்லை என்பது உண்மை.

ஆனால் அனைத்து அதிகாரங்களையும் பெற்று உயர்ந்த பதவிகளில் இருந்த ஒரு முஸ்லிம் அமைச்சர் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்க முயற்சி செய்யவில்லை என்பது உண்மை. 

காரணம் அந்த அரசாங்கம் கொடுத்த பாராளுமன்றப் பிச்சை. 

பிச்சையை எடுத்து விட்டு பிச்சை கொடுத்தவனுக்கு எப்படி எதிர்ப்புத் தெரிவிப்பது?

உண்மையில் கையை உயர்த்தியவர்களை விட்டுவிட்டு உயர்த்தச் சொன்னவர்களை நிராகரிப்பதுதான் நன்று. 

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

"ஒரு நீக்ரோ அடிமை தலைவராக வந்தாலும் கட்டுப்படுங்கள்" என்று கட்டுப்பாட்டை மிம்பர் மேடையில் சொல்லிவிட்டு ஏன் அப்பாவிகளை ஏசி வசை பாடுகிறீர்கள்?

இந்தக் தலைப்பை பற்றி பேசக்கூடாது என்று நினைத்தேன். இது பற்றி சொல்லப்படும் பொய் ஒன்று தான் ஜனாஸாவை எரிக்க இருபதுக்கு ஆதரவு என்பதாகும்.

இது மா பெரும் பொய்.

 இருபதுக்கு ஆதரித்தவர்களுக்கு ஆதரவு கொடுத்தது பிழை. 

மட்டுமல்ல மாபெரும் குற்றம். இன்னொரு பொருத்தமான வார்த்தையில் சொல்வதாயின் அநீதிக்கு ஆதரவு கொடுத்தல் என்பதாகும்.

✍️ Abdul Azeez

Post a Comment

0 Comments